சீனா: சீனாவில் டீப்சீகின் என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு உலகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில் அதற்கு எதிரான கருத்துக்களும் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் டீப்சீகின் உண்மை தன்மை தொடர்பாக தொழில்நுட்ப நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சீனாவின் டீப்சீக் ஏ.ஐ கோகுலில் லா.எம்.டி.ஏ மற்றும் போட், மெட்டா ஏ.ஐ, மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிக் சாட் மற்றும் அசுர் ஏ.ஐ, ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி மற்றும் ஜிபிடி 4 உள்ளிட்ட ஏ.ஐ மின்பொருட்களை பின்னுக்கு தள்ளிவிட்டது.
இந்த சூழலில் டீப்சீக் தொடர்பாக 5 முக்கிய அனுமானங்கள் வலம்வர தொடங்கி உள்ளன. சார்பற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் அவற்றின் உண்மை தன்மையை வெளியிட்டுள்ளனர். டீப்சீக்கின் ஏ.ஐயின் இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆர்டிபிசியல் ஜென்ரல் எனப்படும் மனிதர்களுக்கு நிகரான ஏ,ஐ தொழில்நுட்பத்தை நோக்கி இட்டு செல்லும் என்று சிலர் ஐயம் கொள்கின்றனர். ஆனால் அது போன்ற ஒரு முடிவுக்கு செல்ல அவசியம் இல்லை என்றும் டீப்சீக் ஏ.ஐ திறனில் மேம்பாடு மட்டுமே அடைந்துள்ளது எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
டீப்சீக்கின் வெற்றியால் அமெரிக்காவின் தொழில்நுட்ப பொருள்கள் ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகள் இனி சீனாவை பாதிக்காது என்று சிலர் கூறுகின்றனர். அதாவது கிராபிக் பிரசஸிங் யூனிட்டுகளை சீனா குறைவாகவே இறக்குமதி செய்யும் என்று கூறப்படும் நிலையில் ஏற்றுமதியில் அமெரிக்கா விதித்துள்ள நிபந்தனைகள் தொடர்ந்து சீனா மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே நுட்பமான கிராபிக் பிரசஸிங் யூனிட்டுகளை தயாரிக்கும் நிவிடியா நிறுவனத்திற்கே டீப்சீக் ஏஐ சவாலாக இருக்கும் என்று கூறப்படுவதையும் நிபுணர்கள் மறுத்துள்ளனர்.
டீப்சீக் மென்பொருளை பார்வையிடுதல், திருத்துதல், பகிர்தல்,பயன்படுத்துதல் ஆகியவற்றை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை மறுத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் தரவிறக்கம், திருத்தம், இலவசமாக மறு பயன்பாடு செய்தல் ஆகிய வசதிகள் இதில் இருந்தாலும் முழுமையான ஓபன் சோர்ஸ் என்று கூறிவிடமுடியாது என்கின்றனர். டீப் சீக் ஏ.ஐ., தனிமனித ரகசியக் காப்புக்கு கூடுதல் ஆபத்தாக இருக்கும் என்று கூறுவதையும் மறுத்துள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் மற்ற ஏ.ஐ மென்பொருள்கள் அளவுக்கு மட்டுமே இதன் ரகசிய காப்பு தொடர்பான சிக்கல்கள் இருப்பதாக விளக்கமளித்துள்ளனர்.
The post டீப் சீக் வெற்றி பெற்றாலும் அமெரிக்காவின் ஏற்றுமதி நிபந்தனை சீனா மீது தாக்கத்தை ஏற்படுத்தும்: நிபுணர்கள் விளக்கம் appeared first on Dinakaran.