புதுடெல்லி: டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டுள்ளதால் கிராப்-4 கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி – தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி மற்றும் அண்டை மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறது.