புதுடெல்லி: டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் மீது கற்கள் வீசப்பட்டது, இது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட ஒரு குழு முயன்றது. அந்தக் குழுவில் இருந்து கற்கள் வீசப்பட்டன. இது குறித்த வீடியோவை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. மேலும், இது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.