புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, டெல்லி மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்கு மழை குறித்த ரெட் அலர்ட்டை கொடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்நிலையில், டெல்லி மட்டுமல்லாது ஹரியானாவின் சில பகுதியிலும் மழை பதிவானது.