புதுடெல்லி: புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் ஆடடங்கள் மற்றும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.