டெல்லி துர்க்மேன் கேட் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதியை ஒட்டியுள்ள திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டுமானங்களை, நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது; இப்பகுதி பழமையான கல்லறைத் தோட்டம் என்று மக்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், இந்த வழக்கு வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

