மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் நான்காவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் ஏற்கெனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற வாய்ப்பும், டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வியை தழுவினால் முதல் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருந்தது.