சென்னை: “டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது. மத்திய அரசு ஏற்படுத்தும் தடைகளை சட்டபூர்வமாக ஒவ்வொன்றாக உடைப்போம்.” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சென்னை சுற்றுவட்டாரங்களில் தொழில்வளாகங்களை உருவாக்கியவர் கருணாநிதி. கண்ணாடி முதல் கார் வரை அனைத்து தொழில்களும் அவரது ஆட்சியில் தொடங்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.