பட்டியாலா: டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்ட களத்தில் மேலும் ஒரு விவசாயி நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
டெல்லியின் ஷம்பு மற்றும் கன்னவுரி எல்லையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.