புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் முதல்வரான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி டெல்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். டெல்லி பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் கூட்டத்தில் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி, எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தாவினை எதிர்ப்பதற்கு ஒரு வலிமையான பெண் முகம் வேண்டும் என்பதால் அதிஷியின் பெயர் முன்மொழியப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், கல்காஜி எம்எல்ஏவான அதிஷி உட்பட கட்சியின் 22 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.