புதுடெல்லி: டெல்லி – நொய்டா நேரடி பறக்கும் பாதையில் (டிஎன்டி) கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2016-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலமாக இந்த பறக்கும் பாதையை பயன்படுத்தும் லட்சக்கணக்கானோர் பயனடைவர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது தீர்ப்பில், "டெல்லி – நொய்டா நேரடி பறக்கும் பாதையில் பயணிக்கும் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தனியார் நிறுவனமான நொய்டா டோல் பிரிட்ஜ் கம்பெனி லிமிட் (என்டிபிசிஎல்)-க்கு அனுமதி வழங்கிது நியாயமற்றது, நீதிக்கு புறம்பானது, தன்னிச்சையானது.