சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவைப் பார்ப்பது இதுவே கடைசி முறையாக இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
மோசமான ஃபார்ம் காரணமாக நேற்று தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக ஷுப்மன் கில் களமிறங்கினார்.