மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் இணைந்து நடித்துள்ள படம் ‘டெஸ்ட்’. இந்தப் படம் மூலம் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், இயக்குநராக அறிமுகமாகிறார். நெட்பிளிக்ஸ் தளத்தில் ஏப்.4-ல் நேரடியாக இந்தப் படம் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அப்போது சித்தார்த் கூறும்போது, “நம் நாட்டில் கிரிக்கெட் என்பது வாழ்க்கை. யாரைக் கேட்டாலும் கிரிக்கெட் பிடிக்கும் என்பார்கள். நானும் அதில் ஒருவன். தினமும் பல மணி நேரம் கிரிக்கெட் பார்த்து, விளையாடி அந்த விளையாட்டுடன் பழக்கமாகி இருப்பார்கள்.