துபாய்: டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை, ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸையும் சேர்த்து 10 விக்கெட்களை வீழ்த்திய ஸ்காட் போலண்ட் 29 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாட ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை அடைந்துள்ளார்.