மும்பை: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறக்கூடாது என்று அணியின் முன்னாள் வீரர்கள் நவ்ஜோத் சிங் சித்து, சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்திய அணி அடுத்த மாதம் ஜூன் 20-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.