புதுடெல்லி: கிழக்கு டெல்லி சாகர்பூரைச் சேர்ந்தவர் துஷர் சிங் பிஸ்த் (23). பிபிஏ பட்டம் பெற்ற இவர் நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு ஆட் களை தேர்வு செய்யும் நபராக பணியாற்றுகிறார். இவர் பம்பிள் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற பிரபல டேட்டிங் செயலிகளில் போலி பெயரில் கணக்கு தொடங்கி இந்தியா வந்திருக்கும் அமெரிக்க மாடல் என அறிமுகம் செய்துள்ளார்.
செயலி ஒன்றின் மூலம் விர்சுவல் சர்வதேச மொபைல் எண்ணை பெற்று அதை பயன்படுத்தியுள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு மாடலின் போட்டோவை இவர் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்து 18 வயது முதல் 30 வயதுள்ள பெண்கள் பலர் இவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் நம்பிக்கையை பெற்றபின்பு, போன் எண்கள், தனிப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கேட்டு பெற்றுள்ளார். மாடலிங் துறைக்கு செல்ல விரும்பும் பெண்கள் கவர்ச்சி உடையில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.