புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா கூறியிருந்தனர். அவர்களது கருத்து பாஜகவின் கருத்து அல்ல என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியிருந்தார். இந்த நிலையில் அதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
“உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜக-வை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.