கெக்கியாவோ: சீனாவில் உள்ள கெக்கியாவோவில் டைமண்ட் லீக் தடகள போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீப்பிள்சேஸில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் பந்தய தூரத்தை 8 நிமிடம் 23.85 விநாடிகளில் கடந்து 8-வது இடம் பிடித்தார்.
எத்தியோப்பாவின் எத்தியோப்பியாவின் அப்ராம் சிமே (8:07.82) முதலிடத்தையும், கென்யாவின் எட்மண்ட் செரெம் (8:08.68) 2-வது இடத்தையும், சைமன் கிப்ரோப் கோச் (8:09.05) 3-வது இடத்தையும் பிடித்தனர்.