வாஷிங்டன்: வணிக நம்பிக்கையைக் குறைத்து, உலகளாவிய வளர்ச்சியைக் குறைக்கும் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ள கட்டண விதிப்புகளுக்கு மத்தியில், தரகு நிறுவனங்கள் தங்களின் முன்னறிவிப்புகளை மாற்ற முயன்றதால், உலக அளவில், அமெரிக்க பொருளாதாரம் 60 சதவீதம் மந்தநிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக ஜே.பி. மோர்கன் எச்சரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் பல்வேறு நாடுகளின் பொருள்களுக்கு புதிய கட்டணங்களை இந்த வாரத்தில் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அமெரிக்க பொருள்களுக்கு பதில் வரி விதித்துள்ளது. இது வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நிதிச் சந்தையின் பேரழிவு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஜே.பி. மோர்கன் நிறுவனம் கூறுகையில், "உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பு இது 40 சதவீதமாக இருந்தது.