வாஷிங்டன்: அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றத்தின்) ஒப்புதல் இன்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ட்ரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், கனடா, மெக்ஸிகோ உட்பட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடும் வரிகளை விதித்தார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரி விகிதத்தைக் குறைத்தார்.