கரகஸ்: அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.