புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக இந்தியப் பங்குச் சந்தையில் சரிவு காணப்பட்டு வருகிறது. ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். அதேசமயம், சீன அரசு, அந்நாட்டு பொருளாதாரத்தை ஊக்குவிக்க ஊக்கத் திட்டங்களை அறிவித்த நிலையில், சீனப் பங்குச் சந்தை ஏற்றத்தைக் கண்டு வந்தது.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை மீதான மதிப்பீட்டை சர்வதேச பங்குச் சந்தை தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ குறைத்திருந்தது.