வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்பின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையால், பெரும்பாலான அமெரிக்க நட்பு நாடுகளும் சீன ஆதரவு நிலைப்பாட்டுக்கு நகரும் என சர்வதேச விவகாரங்களை உற்று நோக்கும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா, முதல் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் செல்வாக்குக்கு சவால் விடக்கூடிய நாடாக விளங்கி வருகிறது. சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்த, அமெரிக்கா "ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன்" கூட்டாண்மைகளை உருவாக்கும் உத்தியை நீண்ட காலமாக கடைப்பிடித்து வருகிறது.