பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவ‌ரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவை விசாரித்ததில் அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு நட்சத்திர விடுதியின் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ மற்றும் அம‌லாக்கத்துறை அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்ற‌னர்.