சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, அக்.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அக்.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த சூழலில் மறுநாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது. அதன்பின் அக்.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்திருந்தது.