சென்னை: சென்னையில் இன்று (மே.6) ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 என உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.125 என அதிகரித்துள்ளது.
சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ரூ.74,320 என ஒரு பவுன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சத்தை எட்டியது. பின்னர் படிப்படியாக விலை குறைந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.160 என உயர்ந்தது. தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.