
சென்னை: தங்கம் விலை இன்று (அக்.9) பவுனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று ஏற்றம் கண்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம், செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது.

