சென்னை: சென்னையில் இன்று (அக்.22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்துள்ளது.
எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.