சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23) பவுனுக்கு ரூ.280 குறைந்து ஒரு பவுன் ரூ.71,520-க்கு விற்பனை ஆகிறது. நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.