சென்னை: சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.58 ஆயிரமாக இருந்தது.