சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண சீசன், அடுத்த நவராத்திரி, தீபாவளி எனப் பண்டிகை காலமும் வரும் என்பதாலும், சர்வதேச வர்த்தக நிலவரத்தாலும் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.