சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.3) புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.78,000-ஐ கடந்து நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை காரணமாக தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால், பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருவதுடன், தங்கத்தில் முதலீடும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.