
கோவை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஓராண்டுக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.74 லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதால், மத்திய அரசு இறக்குமதி மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் குறைக்க வேண்டும் என்று தங்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருவதால், நகை தயாரிப்புத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் மாதங்களில் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கணித்துள்ளதாக தங்க நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

