சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில், ஜூன் 23-ம் தேதி முதல், தங்கம் விலை குறைந்து வந்தது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,320 ஆக இருந்தது. இதன் பிறகு, ஜூலை 10-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 நாட்களில் பவுனுக்கு மொத்தம் ரூ.1,120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து, ரூ.9,140-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.79,768-க்கு விற்கப்பட்டது.