சென்னை: சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.
இதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.8,340-க்கும், பவுனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.66,720-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 4 நாட்களில் பவுனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது.