சென்னை: ‘மாணவர்கள் தங்கள் திறன்கேற்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும்’ என விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சி குறித்து சென்னை விஐடி கல்லூரியின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் கூறியதாவது: ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் நேரடியாக சென்று மாணவர்கள் பாடப்பிரிவுகள் குறித்து தெரிந்துக்கொள்வது என்பது கடினம். இங்கே ஒரே இடத்தில் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் பொதுவாக மருத்துவம் மற்றும் பொறியியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படும். ஆனால் இங்கே நூற்றுக்கணக்கான பாடப்பிரிவுகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கிறது.
ஒரே இடத்தில் எல்லாம் கிடைப்பது சிறப்பான திட்டம். ஒரு அரங்குக்கு சென்று அரைமணி நேரம் அங்கு இருந்து பேசினால் கல்லூரியை பற்றி முழு தகவல்களும் கிடைத்துவிடும். தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் மாணவர்கள் எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் மாணவர்கள் பெற்றோர் சொல்வதை படித்தனர். அதன்பின் ஆசிரியர்களின் யோசனைகளை கேட்டு செயல்பட்டனர். தற்போதைய இளம் தலைமுறையினர் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர் என 3 பேர் சேர்ந்து ஆலோசித்து முடிவு செய்கின்றனர். இங்கே உள்ள வாய்ப்புகள் பற்றி மாணவர்கள் தெரிந்துக்கொண்டு பெற்றோர் மற்றும் ஆசியர்களுடன் பேசியும், மாணவர்கள் தங்களின் திறனை வைத்தும் கல்லூரிகளை தேர்வு செய்ய வேண்டும்.
விஐடியில் அனைத்து விதமான பாடப்பிரிவுகளும் வழங்கப்படுகிறது. விஐடியில் பொறியியல் தான் முதன்மை பாடமாக இருந்தாலும் தற்போது சட்டம், பேஷன், பொருளாதாரம் சார்ந்த படிப்புகள், உளவியல் சார்ந்த படிப்புகள் தற்போது அனைத்து நிறுவனங்களில் தேவை உள்ளது. அனைத்து விதமான பாடங்களை வழங்க நிதனமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். தற்போதைய காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால் மாணவர்கள் எந்த பாடப்பிரிவு தேர்ந்தெடுத்தால் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
The post தங்கள் திறனுக்கேற்ப பாடப்பிரிவுகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் பேட்டி appeared first on Dinakaran.