கர்நாடகாவில் தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவை காங்கிரஸ் பாதுகாக்க முயற்சிப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக பாஜக ஆட்சியில் ரன்யா ராவ் நிறுவனத்துக்கு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது.
கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) கடந்த 3-ம் தேதி துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனையிட்டனர். இதில் ரூ.2.67 கோடி ரொக்கமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின‌.