*முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
தஞ்சாவூர் : தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் தஞ்சை கிளை சார்பில் நேற்று தஞ்சாவூரில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு கிளை தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ரவி கோரிக்கை குறித்து விளக்க உரையாற்றினார். மாநில செயலாளர் அஜெய்ராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இறுதியில் கிருபாகரன் நன்றி உரை ஆற்றினார்.
TNPSC மூலம் நியமனம் செய்யப்படவுள்ள JTO பணியிடங்களை DGT வழிகாட்டுதல் படி 1:1 என்ற விகிதாச்சாரத்தில் நியமிக்கப்பட வேண்டும். முதலமைச்சர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதிப்படி PPP மற்றும் COE திட்ட தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
2005ம் ஆண்டு பணியில் சேர்ந்த பணிமனை உதவியாளர்களின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை செய்ய வேண்டும். பதவி உயர்வு மற்றும் காலமுறை இடமாறுதல் கலந்தாய்வு முறையில் வழங்க வேண்டும். MSDE வழிகாட்டுதல் படி சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
The post தஞ்சாவூரில் தொழிற்பயிற்சி அலுவலர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.