கோபால்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே எல்லைப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள்கள் பேபிஸ்ரீ (17), நாகசக்தி (12). இருவரும் அரசு பள்ளியில் படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் அஞ்சுகுழிப்பட்டி அருகே சங்கிலியான் தடுப்பணையில் குளிக்க தங்கராஜ், மகள்களை அழைத்துச் சென்றார்.
தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த பேபிஸ்ரீ, நாகசக்தி ஆகியோர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சாணார்பட்டி போலீசார் வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் பலி appeared first on Dinakaran.