சென்னை: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக கடந்த 2024ல், 26,810 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,52,683 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2025 மார்ச் வரை 6932 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 75,030 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட குற்றவாளிகளிடம் இருந்து ரூ.27.80 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 12,714 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒழிப்பு: தமிழ்நாடு அரசு தீவிரம் appeared first on Dinakaran.