வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படம் தணிக்கை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள படம் ‘மனுஷி’. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. படத்தின் ட்ரெய்லர் படி, வீட்டிலிருக்கும் ஆண்ட்ரியா காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார். அங்கு அவருக்கு பல்வேறு சித்ரவதைகள் நடக்கின்றன. அவரை நோக்கி தொடர் கேள்விகள் எழுப்படுகின்றன. இதுவே ‘மனுஷி’ படத்தின் களமாக இருக்கிறது.