‘தண்டேல்’ பார்த்துவிட்டு படக்குழுவினருக்கும், மகன் நாக சைதன்யாவுக்கும் புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா.
சந்து மொண்டட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தண்டேல்’. இப்படத்துக்கு தெலுங்கில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 3 நாட்களில் உலகளவில் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தினைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.