சென்னை: தனியார் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்க உரையும் எழுதப்பட வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் பழனி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்க உரையும் எழுதப்பட வேண்டும் என 1947ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் மற்றும் அரசாணைபடி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உரிய ஆணைகளை வெளியிட்டுள்ளது. அரசாணையில் அறிவுறுத்தியதற்கிணங்க அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளர்களும் அறியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும் என்று அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post தனியார் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்க உரையும் எழுதப்பட வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.