தனுஷ் உடன் போட்டியா என்ற கேள்விக்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்துள்ளார்.
பிப்ரவரி 21-ம் தேதி தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்த இரண்டு படங்களின் ட்ரெய்லருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த இரண்டு படங்களின் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.