விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘குபேரா’ மற்றும் ‘தேரே இஸ்க் மெயின்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘குபேரா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் இறுதியாக சில நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. ‘தேரே இஸ்க் மெயின்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த இரண்டையும் முடித்துவிட்டு வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் தனுஷ்.