சென்னை: தன்பாலின ஈர்ப்பு சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில்,இந்த சமூகத்தினருக்கான கொள்கை இறுதி வடிவம் பெறும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட பிற துறைகளின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது. பிற துறைகளின் கருத்துக்களின் அடிப்படையில், கொள்கை வகுத்து, அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று அறிவிக்கப்படும்.
சமூகத்தில் தொடர்ச்சியாக பாரபட்சமாக நடத்தப்படும் மருவிய பாலினத்தவருக்கான தனிக் கொள்கையை வகுப்பது என்றும் அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கேட்ட நீதிபதி, மருவிய பாலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய தன் பாலின ஈர்ப்பு மற்றும் மருவிய பாலினத்தவர்களுக்கான ஒரே கொள்கையை வகுப்பதே முறையாக இருக்கும்.
தன் பாலின சமூகத்தினருக்கான வரைவு கொள்கையையும், மருவிய பாலினத்தவர்களுக்கான வரைவு கொள்கையையும் அரசு சமர்ப்பிக்க வேண்டும். இந்த இரு பிரிவினருக்கும் ஒரே கொள்கையை வகுப்பதில் என்ன சிக்கல் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post தன் பாலின ஈர்ப்பு சமூகத்தினருக்கான வரைவு கொள்கையை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.