தமிழகத்தில் இருந்தும் சிறந்த 10 தொழிலதிபர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? அவர்கள் என்னென்ன வணிகம் செய்கின்றனர். மற்ற விவரங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் உள்ள சிலர் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.
ஷிவ் நாடார்
தமிழகத் தொழிலதிபரும் கல்வியாளருமான சிவ சுப்பிரமணியம் என்ற ஷிவ் நாடார், இந்தியாவின் முன்னணி ஹெச்சிஎல் நிறுவனத்தின் முன்னாள் தலைவராவார். மிக எளிமையாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு 31 பில்லியன் டாலருக்கு மேல். ஹெச் சில் தலைவர் பதவியில் இருந்து ஷிவ் நாடார் விலகிய நிலையில், அவரது மகள் ரோஷினி நாடார் தலைவராக உள்ளார்.
ஆனந்த கிருஷ்ணன்
மலேசிய தமிழக வணிகரான ஆனந்த கிருஷ்ணன் உசாகா தேகாஸ்-ன் நிர்வாக தலைவராவார். இவரின் சொத்து மதிப்பு 7.5 பில்லியன் டாலராகும்.
ராம் ஸ்ரீராம்
இந்திய வம்சாவாளியை சேர்ந்த அமெரிக்க வணிகரான ராம், கூகுள் போர்டு குழுமத்தில் உள்ள உறுப்பினராவார். கூகுள் நிறுவனத்தில்முதலீடு செய்த முதல் முதலீட்டாளராவார். இவர் முன்னாள் அமேசானின் ஊழியராவார். இவர் அமெரிக்க சிட்டிசன் ஆனாலும், படித்தது எல்லாம் சென்னை லயோலா கல்லூரியில் தான். இவரின் சொத்து மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலாராகும்.
கலாநிதி மாறன்
சன் மீடியா குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன், 270 கோடி டாலர் சொத்து மதிப்பினை கொண்டுள்ளார். சென்னையை சேர்ந்த பிரபல பிசினஸ் மேனான இவர், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.
கோபால கிருஷ்ணன்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரான கிரிஷ் கோபால கிருஷ்ணனின் சொத்து மதிப்பு சுமார் 390 கோடி டாலராகும். இவர் பிறந்தது கேரளா என்றாலும், படித்தது வளர்ந்தது சென்னையில் தான்.
பார்கவ் சாய் பிரகாஷ்
தமிழகத்தின் சிறந்த தொழிலபதிர்களில் ஒருவரான இவர், சேலத்தினை சேர்ந்தவர். பல்வேறு வணிகங்களை செய்து வருகின்றார். 30 வருடங்களுக்கு மேலாக அனுபவம் கொண்ட இவரும், தமிழக கோடீஸ்வரர்களில் ஒருவர்.
வெள்ளையன்
சென்னையில் பிறந்த வெள்ளையன் முருகப்பா குழுமத்தை சேர்ந்தவராவார். இவரின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்களாகும். முருகப்பா குழுமம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும்.
ராஜரத்னம்
ஈரோட்டினை சேர்ந்த மிகப்பெரிய உற்பத்தியாரான ராஜரத்னம், தமிழகத்தின் மிகப்பெரிய வணிகராவார்.
ஸ்ரீனிவாசன்
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் ஸ்ரீவாசன், தமிழக தொழிலதிபர்களில் முன்னணியில் உள்ளவர். சிமெண்ட் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனமாகும்.