சென்னை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்துக்கு மாறாக கடந்த ஜனவரி 26-ம் தேதி வரை மொத்தம் 104 நாட்கள் நீடித்தது. மேலும், பல இடங்களில் அதிகனமழை பெய்தது.