சென்னை: தமிழகத்தில் ஏப்.2 மற்றும் 3ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மர்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. நாளை (மார்ச்31) மற்றும் ஏப்.01ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.02ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிதம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிதலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்.03ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிதலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்பத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் ஏப்.2 மற்றும் 3ம் தேதிகளில் 7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.