‘கேம் சேஞ்சர்’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழகத்தில் எந்தவொரு சிக்கலுமின்றி வெளியாகிறது.
‘இந்தியன் 3’ தயாரிப்பு பிரச்சினைகளை முன்வைத்து ‘கேம் சேஞ்சர்’ வெளியீட்டுக்கு பிரச்சினை உருவானது. லைகா – ஷங்கர் இருவருக்கும் இடையே எந்தவொரு சமரச நிலையும் எட்டாத காரணத்தினால், ‘கேம் சேஞ்சர்’ வெளியாகுமா என்ற குழப்பம் நீடித்தது. இறுதிகட்டப் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுவிட்டது.